திருச்சி மாவட்டம், குண்டூர் எம்.ஐ.இ.டி. அருகே அய்யனார் நகர் 7-வது தெருவில் ஆபத்தான நிலையில் கேபிள் கம்பம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஆபத்தான கேபிள் கம்பத்தை அகற்ற அல்லது சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.