நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

Update: 2026-09-27 14:01 GMT

திருப்பூரில் நாய்கள் தொல்லை குறைந்தபாடில்லை. இதனால் இரவு நேரம் பணி முடிந்து தொழிலாளர்கள் தனியாக செல்ல முடிவதில்லை. அவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. ஒவ்வொரு நாளும் பணி முடிந்து இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வீடு சென்றுசேரும் முன்பு, படாதபாடு படுகிறார்கள். எனவே தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்