அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் வழியாக கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் பெரியநாகலூர் மற்றும் கோப்பிலியங்குடிக்காடு கிராமங்களில் உள்ள தரைப்பாலங்கள் வழியாக மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியல் உள்ள தரைப்பாலங்களை குழாய் பாலங்களாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.