மின்கம்பங்களில் படரும் கொடிகள்

Update: 2026-09-27 13:39 GMT

கூடலூர் பகுதியில் பெரும்பாலான மின்கம்பங்களில் காட்டு செடிகள் மற்றும் கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. இதனால் மின்சாரம் அடிக்கடி தடைபட்டு வருகிறது. குறிப்பாக நடுக்கூடலூர், ராஜகோபாலபுரம், கெவிப்பாரா உள்பட பல்வேறு இடங்களிலும் மின் கம்பங்களை காட்டு கொடிகள் ஆக்கிரமித்து உள்ளதால் குறைந்த மின்னழுத்த பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பங்களை சூழ்ந்த காட்டு செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்