ஆபத்தான மரங்கள்

Update: 2026-09-27 13:43 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குதிரைவட்டம் பகுதியில் சாலையோரத்தில் ராட்சத மரங்கள் வானுயர வளர்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களின் கிளைகள் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசும்போது முறிந்து கீழே விழுகின்றன. அதிலும் பட்டுப்போன நிலையில் பல கிளைகள் காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்