கூடலூரில் இருந்து புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலுக்கு செல்லும் சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இது விபத்துக்கு வழிவகுக்கிறது. அத்துடன் சாலையும் மேலும் மோசமாகி வருகிறது. எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.