வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2026-09-27 15:03 GMT

விருதுநகர்-காரியாபட்டி சாலை விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. தற்போது சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படாததால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையை கடக்க பெண்கள், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைப்பார்களா?

மேலும் செய்திகள்