தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?

Update: 2026-07-26 19:18 GMT

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் மக்கா மசூதி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கரையில் மண்ணை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதேபோல் வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கந்தசாமி ஜமேதார் தெருவில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-குணசேகரன், வேலூர்.

மேலும் செய்திகள்