திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள தூண்டிய விநாயகர் கோவில் முன்பு, வடக்கு வீதி காய்கறி, பழக்கடைகள் முன்பாக ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருட்களை பறித்து உண்கின்றன. சில நேரங்களில் முட்டுவதற்கு ஓடி வருகின்றன. எனவே மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்துமாறு வேண்டுகிறேன்.