பேனர்கள் வைப்பதை தடுப்பார்களா?

Update: 2026-07-26 18:09 GMT

ஆரணியில் பழைய ஆற்காடு சாலையில் உள்ள தரைப்பாலத்தை தற்போது ஆற்று மேம்பாலமாக உயர்த்தி கட்டப்பட்டது. அந்த வழியாக அனைத்து வாகனங்களும் செல்கின்றன. காமராஜர் சிலை அருகே உயரமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவதால் எதிர்பார்வை குறைவாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் வருவது தெரியாமல் சிரமம் ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. அந்தப் பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமநாதன், ஆரணி.

மேலும் செய்திகள்