திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் திரை அமைக்கப்படவில்லை. இதனால் ரெயில் புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை மாற்றம் குறித்து பயணிகள் குழப்பமடையும் நிலை உள்ளது. குறிப்பாக முதியோர், பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி உடனடியாக டிஜிட்டல் தகவல் திரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.