மணலூர்பேட்டையில் பல வருடங்களாக கட்டி முடிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எவ்வித பயனும் இன்றி காட்சிப்பொருளாக மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.