கடலூர் சாவடி பகுதியில் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. அப்பகுதி பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவசர உதவி பெறவும் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் புதிதாக காவல் நிலையம் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.