புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2026-09-20 17:43 GMT
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மும்முனை சந்திப்பு செல்லும் சாலையின் ஓரம் மூடப்படாமல் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்து கடந்த வாரம் தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர பள்ளத்தை சுற்றி மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புக்கழி அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்