நாய்கள் தொல்லை

Update: 2026-09-20 18:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகள், பள்ளி சிறுவா், சிறுமிகள், முதியவர்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடவும், கருத்தடை செய்யவும் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி கொண்டு கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்