திருவண்ணாமாலை மாவட்டம் தூசி கிராமத்தில் மெயின் ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டது. அந்தக் கட்டிடம் சிதிலமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழைய கட்டிடத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே பழைய கட்டிடத்தை இடித்து அங்கு புதிதாக அரசு கட்டிடங்களை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-அப்துல்நாசர், தூசி.