திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பதிவு செய்யும் இடத்தில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்யும் நிலை உள்ளது. காலதாமதம் ஏற்படுவதால் அவதிப்படுகின்றனர். ஊசி போடும் இடத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே காலதாமதம் ஏற்படாமல் விரைவான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.