அணைக்கட்டு வருவாய்த்துறை அகரம் பிர்கா உட்கோட்ட வருவாய் ஆய்வாளருக்கான இருப்பிடம், அலுவலகம் பழமையான கட்டிடங்கள் ஆகும். அவைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்து, உறுதித்தன்மையை இழந்து விட்டது. எனவே வருவாய் ஆய்வாளர் பணி செய்ய இடம் இல்லாமல் உள்ளார். பல ஆண்டுகளாக பல வருவாய் ஆய்வாளர்கள் அகரம் கிராமத்தில் வசிக்காததால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வருவாய்த்துறை சேவைகள் பாதிக்கப்படுகிறது. அகரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இருப்பிட கட்டிடங்களை கட்ட வேண்டும்.
-லட்சுமணன், உழவியல் நிபுணர், புதூர் மராட்டிபாளையம்.