எரிவாயு தகன மேடையால் மக்களுக்கு அவதி

Update: 2026-09-06 19:04 GMT

ஆரணி புதுக்காமூர் பகுதியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை உள்ளது. இதை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில தினங்களாக பிணங்களை எரிக்கும் போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நிலை உள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடையில் பிணங்களை எரிக்கும் இடத்தில் துர்நாற்றம் வீசும் நிலையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்