கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரியை சேர்ந்த பொதுமக்களும் அதிகளவு சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் நோயாளிகளின் உறவினர்கள், அவர்களின் குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.