தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு தெற்கே வெள்ளானைக்கோட்டை விலக்கு பகுதியில் இருந்து பள்ளமடை வரையிலான சாலையோரம் சீமைக்கருவேல மரங்களை வெட்ட வேண்டுமென்று சீமான்ஜி என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.