தெருநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2026-09-27 16:34 GMT

பொ.மல்லாபுரம் பேரூராட்சி மற்றும் பொம்மிடி ஊராட்சி வடசந்தையூர், 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலை, குடியிருப்பு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் தெருக்கள் வழியாக அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே பொம்மிடி ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, பொதுமக்களை நாய்க்கடியிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்