சுரங்கப்பாதை வசதி

Update: 2026-09-27 16:39 GMT

தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பாதையின் குறுக்கே ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் மட்டுமே செல்லும் வகையில் உள்ளதால், வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வருகின்றன. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?


மேலும் செய்திகள்