மயான வசதி தேவை

Update: 2026-09-27 16:58 GMT

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான மயான வசதி இல்லை. அரசு ஒதுக்கிய மயான இடத்தில் மழைக்காலத்தில் ஓடைநீர் தேங்கி உள்ளது. இதனால் இறந்தவரை அடக்கம் செய்ய நாமக்கல் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட துறையினர் வேலகவுண்டம்பட்டி பகுதியில் தனியாக இடம் அமைத்து மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


மேலும் செய்திகள்