பள்ளிபாளையத்தில் உள்ள தெருக்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக நடந்தும், வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்துடனே செல்கின்றனர். மேலும் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.