ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பஸ் நிலையம் புதுப்பித்து கட்டப்பட்டு வேலைகள் அனைத்தும் முடிந்தும் பல வாரங்கள் ஆகிறது. அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். இதனால் மக்கள் சாலையோரம், திறந்த வெளியில் நின்று பஸ் ஏற வேண்டி உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையத்தை அதிகாரிகள், அரசியல் வாதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
-கீர்த்திவாசன், ஆற்காடு.