ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் காரியமேடை கட்டப்பட்டது. இதை இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. எப்போதும் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. காரிய நிகழ்வுகள் பொதுவெளியில் அல்லது மரத்தடியில் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. அது மட்டுமின்றி காரிய மேடை உள்ள அறை பழைய உடைந்த பொருட்கள் துருப்பிடித்த இரும்பு சாமான்கள், ஆழ்துளை குழாய்க்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைப்புகள் ஆகியவற்றை போட்டு வைத்திருப்பதால் மக்கள் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. எனவே வேறொரு இடத்தில் புதிதாக காரியமேடை அமைத்துத் தந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.