போக்குவரத்து நெரிசல்

Update: 2026-09-27 19:01 GMT

உடன்குடி மெயின் பஜாரில் தற்போது ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும். கனரக வாகனங்களை தேரியூர்-செட்டியாபத்து ரோடு வழியாக செல்ல ஏற்பாடு செய்ய‌வேண்டும். உடன்குடி நான்கு பிரதான சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்