அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச் சந்தைக்கு செல்லும் சாலையில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. சந்தை நடக்கும் அன்று ஏராளமான நாய்கள் வந்து விடுகின்றன. அந்த நாய்களால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் தொல்லையாக உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்யவும், வெறிநோய் தடுப்பூசி போடவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், பொய்கை.