மதுரை நகர் திருப்பரங்குன்றம் சாலை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் பெரியார் பஸ் நிலையம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் செல்லும் இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?