கடலூர் மாவட்டம் ம.புளியங்குடி- மயிலாடுதுறை அருகே சித்தமல்லி ஆகிய கிராமங்களின் வழியே கொள்ளிடம் ஆறானது ஓடுகிறது. பருவமழை காலங்களில் இவ்வழியாக செல்லும் உபரி நீரானது கடலில் கலப்பதை தடுக்கவும், அந்த தண்ணிரை விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளவும் புதிய கதவணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.