சேலம் பாவடி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.