‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-09 13:09 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ஓராண்டுக்கு மேலாக பெரிய தேன்கூடு ஒன்று ஆபத்தான முறையில் இருந்ததால், பள்ளி மாணவர்களையும் பொதுமக்களையும் தேனீக்கள் கடிக்கும் அபாயம் நிலவியது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தேன்கூட்டை அப்புறப்படுத்தினர். இதற்காக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்