‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-09 13:09 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராம ஊராட்சியில் 125 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள செங்குணம் பகுதி மக்களுக்கு கடந்த பல மாதங்களாக பணி வழங்கப்படாததால், பொதுமக்கள் வேலையின்றி அவதியடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகள் வழங்க வழிவகை செய்தனர். இதற்காக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்