கொல்லிமலை சோளக்காட்டில் லேம்ப் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. மலைவாழ் மக்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அந்த சங்கத்தின் நுழைவு வாயில் கதவு கடந்த சில மாதங்களாக திறந்தே கிடக்கிறது. இதனால் அந்த சங்கத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவ்வப்போது சமூக விரோத செயல்களும் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சங்கத்தின் நுழைவுவாயில் கேட்டை உடனடியாக சீரமைத்து, மூடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமகக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.