தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோட்டக்கரை கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்திற்கு, மகளிர் திட்ட ஒன்றிய அளவிலான கூட்டமைப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு போதிய இடவசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த வசதியும் இல்லாததால் பெண்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.