அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அம்பாப்பூர் கிராமத்தில் ஊரின் நுழைவு வாயிலில் கிராமத்தின் பெயரைத் குறிக்கும் வகையில் எந்தவிதமான பெயர் பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வெளியூர் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ஊரின் பெயருடன் கூடிய புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.