கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேைவக்காக கூட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் கண்காணித்து நிரந்தரமாக ஊருக்குள் வருவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.