புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க நகர்மன்ற கட்டிடம் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் இக்கட்டிடத்தின் சிலாப்புகள், பெயிண்ட் மற்றும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து சிதிலமடைந்து காணப்படுவதோடு, மழைக்காலங்களில் உள்ளே மழைநீரும் கசிகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதுடன், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது. எனவே, மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளமான இந்த நகர்மன்றத்தை புதுப்பொலிவுடன் பராமரித்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.