நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையோரத்தில் கார்ஸ்வுட் அருகே தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த பணி முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தடுப்புச்சுவரை முழுமையாக கட்டாததால் மண்சரிவு, விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட தடுப்புச்சுவர் கட்டும் பணியை நிறைவு செய்ய வேண்டும்.