நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் குலசேகரன் புதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. தினமும் அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த அலுவலகத்திற்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி வட்டார போக்குரவத்து அலுவலகத்திற்கு பஸ்வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளியப்பன், இறைச்சகுளம்.