சென்னை சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் செருப்பு தைக்கும் பணிக்கூடம் நடத்தி வரும் பகுதியில் மழைநீர் வடிகால் அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.