வேலூர் மாநகராட்சி வார்டு எண்: 4-ல் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு, சி.எம்.ஜான் தெரு உள்ளிட்ட தெருக்களிலும், வார்டு எண்: 1-ல் சத்திரம் தெரு, கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெரு, 3-வது தெரு ஆகிய பகுதிகளிலும் அதிகளவில் தெரு நாய்கள் உள்ளன. இவைகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. மாநகராட்சி நிர்வாகம் தற்போது சமுதாய நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த வகையில் இந்தப் பகுதியில் அதிக அளவில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-பி. துரை, செங்குட்டை.