நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-10-04 11:43 GMT

இரட்டைக் கரை கால்வாய் மூலம் கொல்லன் குளம், கொண்டையான் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. இந்த கால்வாயில் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள கடைசி மடையில் தண்ணீர் செல்ல முடியாத வகையில் செடிகொடிகள் அடைத்து காணப்படுகிறது. இதனால் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் பாய்வதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மடையில் அடைத்துள்ள செடிகொடிகளை அகற்றி தண்ணீர் சீராக பாய்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமார், தெக்குறிச்சி.

மேலும் செய்திகள்