கோவையை அடுத்த சூலூர் அருகே மாதம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. அதுவும் ஊர் பெயர் பலகைக்கு அடியிலேயே புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை இருக்கிறது. எனவே அந்த பகுதியில் வளர்ந்துள்ள புதர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.