சாலையோரம் ஆபத்தான மரம்

Update: 2026-10-04 12:10 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியிலிருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் கார், லாரி, பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் உள்ள வேப்பமரம் பலத்த காற்றால் இரண்டாக பிளந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாைலயில் அச்சத்துடன் ெசன்று வருகின்றனா். எனவே நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வேப்ப மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்