சென்னையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான ரெயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரெயில் நிலையத்தை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக ரெயில் நிலைய வளாகம் மற்றும் நடைமேடைகளில் அதிக அளவில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இவை நடைமேடைகளில் படுத்துக்கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் பயணிகளைக் கடிக்கவும் துரத்துகின்றன. எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரெயில் நிலைய வளாகத்திகுள் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.