கழிவறை அமைக்கப்படுமா?

Update: 2026-10-04 12:47 GMT

சென்னை ஆதம்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் முதல் தெருவில் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சியின் இலவசக் கழிவறை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதற்கான காரணம் தெரியாத நிலையில், புதிய கழிவறை அமைப்பதற்கான எந்தவொரு பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிய கழிவறையை விரைந்து அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்