பூங்கா மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி விற்பனை

Update: 2026-10-04 12:53 GMT

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகவும், தூய்மையான காற்று வசதிக்காகவும் அங்கு பூங்கா அமைக்கப்பட்டு, ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு உள்ள மரங்களைச் சில தனிநபர்கள் அனுமதியின்றி, சட்டவிரோதமாக வெட்டி வியாபாரம் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் மரங்களை வெட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்