திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் செட்டியார் தெரு, வள்ளுவர் தெரு செல்லும் வழியில் வேளாண்மை அலுவலர் குடியிருப்பு மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலர் குடியிருப்பு இருக்கிறது. அந்தக் குடியிருப்புகள் பாழடைந்துள்ளன. அதில் யாரும் வசிக்கவில்லை. அந்தக் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இருள் சூழ்ந்து உள்ளது. அந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு வேறு ஒரு புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராமன், தூசி.